கொட்டும் மழை.. சுடச்சுட சாதத்துடன் பருப்புப்பொடி; 2 மாதத்திற்கு கெடாது - எப்படி செய்யலாம்?
வெங்கடேஷ் பட்டின் பருப்புப்பொடி எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
பருப்புப்பொடி
பருப்புப்பொடியை இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம். சாதத்திலும் போட்டு சாப்பிடலாம் என்பதால், இது இரண்டுக்கும் உதவக்கூடியது.
சில நாட்களில் உங்களால் சமைக்க முடியவில்லையென்றால், சாதம் மட்டும் வடித்துவிட்டு, இந்த பருப்புப்பொடியை சேர்த்து சாப்பிடலாம். இந்த பருப்புப்பொடியை செஃப் வெங்கடேஷ் பட்டின் முறையில் செய்வது எப்படி என்று பாருங்கள்.
செய்முறை
முதலில் ஒரு கடாயில் பருப்பு, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை, பூண்டு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து தனித்தனியாக பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக ஆறவிட வேண்டும்.
ஆறியபின், காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைக்கும்போது வெல்லைத்தை சேர்த்துக்கொள்ளவேண்டும். வெல்லத்தை வறுக்கும்போதோ அல்லது சூட்டுடனோ சேர்த்துக்கொள்ளக் கூடாது.
இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து, ஃபிரிட்டிஜில் வைத்துவிட்டால் போதும். இரண்டு மாதங்கள் வரை கெடாது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.