மழைக்காலம் தொடங்கியாச்சு..சளி,இருமல் பிரச்சனையா இருக்கா? அப்போ இந்த ரசம் ட்ரை பண்ணுங்க!
தமிழகத்தில் தற்பொழுது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் நிறையப் பேர் சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இதனைச் சரி செய்யத் தூதுவளை இலையைக் கொண்டு ரசம் செய்து மூலம் குணப்படுத்தலாம்.
தூதுவளை ரசம் ரெசிபியின் எளிய செய்முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- புளி - எலுமிச்சை பழ அளவு
- தக்காளி - 2 உப்பு - சுவைக்கேற்ப
- தண்ணீர் - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது
பொடி செய்வதற்கு...
- சீரகம் - 1 டீ1பூன்
- மிளகு - 1 டீஸ்பூன்
- வரமிளகாய் - 1
- மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
- துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- பூண்டு - 7-8 பல்
- தூதுவளை இலை - 1 கைப்பிடி
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து, அதில் புளியை சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு புளித் தண்ணீரில் தக்காளி சேர்த்துக் கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வரமிளகாய், கொத்தமல்லி , கருவேப்பிலை , சிறிதளவு மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து அனைத்தையும் கரைத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு பிறகு பின்பு மிக்சர் ஜாரில் சீரகம், மிளகு, வரமிளகாய், மல்லி, துவரம் பருப்பு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்துப் பொடித்துக் கொள்ள வேண்டும்.அதன் பின் அதில் தூதுவளை இலையைச் சேர்த்து நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றிக் கடுகு, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்துத் தாளித்து, கரைத்து வைத்துள்ளதை ஊற்றி, நுரைக்கவிட்ட தொடங்கும் போது அடுப்பை அணைத்துவிட வேண்டும். இறுதியாக ஒரு பாத்திரத்தில் கொத்தமல்லியைப் போட்டு சிறிது நேரம் மூடி வைத்தால், சுவையான தூதுவளை ரசம் ரெடி..