போப் பிரான்சு ரத்தத்தில் உருவான புதியநோய் - மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்!
போப் பிரான்சிஸ் உடல் நிலை தொடர்ந்து கவலை கிடமாக இருப்பதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
போப் பிரான்சிஸ்
2013 ஆம் ஆண்டு 16ஆது போப் பெனடிக்ட் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பொறுப்பேற்று கொண்டார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ்சமீபகாலமாக வயது மூப்பு பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
இந்த சூழலில் தனது 21 ஆம் வயதிலேயே pleurisy என்ற அழற்சியால் பாதிக்கப்பட்ட பிரான்சிசுக்கு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்ட நிலையில், நாள்பட்ட நுரையீரல் நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதில் கடந்த 14-ந் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.அப்போது அவருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
உடல் நிலை
இதனை தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.எனினும் 88 88 வயதான போப் ஆண்டவரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. போல், போப் ஆபத்திலிருந்து இன்னும் மீளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று காலை, போப் பிரான்சிஸ் ஆஸ்துமா போன்ற நீடித்த தீவிர சுவாச நெருக்கடியை அனுபவித்து வருவதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே நிமோனியா பாதிப்பால் போப் பிரான்சுக்கு செப்சிஸ் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இது நிமோனியாவால் ரத்தத்தில் ஏற்படும் ஒருவித நோய் ஆகும். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இதனால் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் அவர் உடல்நலம் தேற பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர்.