போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்; அடுத்த போப் யார்? வாடிகன் அறிவிப்பு!
போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
போப் பிரான்சிஸ்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்(88). அதிக எடை கொண்டவர் என்பதால் உடல் ரீதியாக அவரால் சுறுசுறுப்பாக இயங்க முடியாது. முழங்கால்கள் மோசமாக இருப்பதால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வந்தார்.
அவ்வப்போது வயது முதிர்வு காரனமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சைக்கு பின் வீடு திரும்புவார். தொடர்ந்து தற்போது, இவர் நிமோனியா காரணமாக ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உடல்நிலை கவலைக்கிடம்
இந்நிலையில், நுரையீரல் தொற்று பிரச்சினையும், அனீமியா தொடர்புடைய பிளேட்லெட்டுகள் குறைந்ததன் காரணமாக போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வாடிகன் அறிவித்துள்ளது. இதனால் போப் பிரான்சிஸ் தனது பதவியை ராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர் ராஜினாமா செய்தால் அடுத்த போப்பை தேர்வு செய்ய ஒரு மாநாடு கூட்டப்படும். போப்பின் மரணம் அல்லது ராஜினாமாவுக்குப் பிறகு கார்டினல்கள் மத்தியில் இருந்து அடுத்த போப் தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.