கொரோனா போலவே பரவும் புதிய வகை HKU5 வைரஸ் - சீன விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
கோவிட்-19 போன்ற புதிய வகை கொரோனா வைரஸ் வவ்வால் மூலம் பரவுவதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே முடக்கி போட்டது.
லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், ஊரடங்கு, முக கவசம், தடுப்பூசி என கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சியை கையிலெடுத்தது.
HKU5
தற்போது கொரோனா பாதிப்பு இல்லையென்றாலும் கூட ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து பலரும் இன்னும் மீளவில்லை. ஆனாலும் அவ்வப்போது ஒமிக்ரான் போன்ற கொரோனா மாதிரிகள் பரவுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
தற்போது வவ்வாலில் இருந்து பரவும் கொரோனா மாதிரி ஒன்றை வூஹான் பல்கலைக்கழகம் மற்றும் வூஹான் நச்சு உயிரியல் மையத்தின் கீழ் இயங்கும் ஆங் சூ ஆய்வகத்தில் வைராலஜிஸ்ட் ஷி ஷிங்லி(shi zhengli) தலைமையிலான நிபுணர்கள் குழு கண்டறிந்துள்ளது.
கோவிட்-19 வைரஸுடன் பல வகைகளில் ஒற்றுமை கொண்டுள்ள இந்த வைரஸுக்கு HKU5 என பெயரிடப்பட்டுள்ளது.இந்த ஹாங்காங்கில் உள்ள ஜப்பானிய பைபிஸ்ட்ரெல் வௌவால்களில் கண்டறியப்பட்டது. இது மார்பெகோவைரஸ் துணை இனத்திலிருந்து வருகிறது.
சுவாச பிரச்சனை
இந்த வைரஸ், மனிதர்களின் சுவாச மற்றும் குடல் உறுப்புகளில்பிரச்சினை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இது COVID-19 அளவுக்கு ஆபத்தானது இல்லை என்றாலும், தொற்றுநோய்க்கான தயார்நிலைக்காக இது கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பின் வளர்ந்து வரும் நோய்க்கிருமிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
HKU5-CoV-2 ஆனது தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், இந்த வைரஸை மேலும் கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. கோவிட்-19 உடன் ஒப்பிடும் போது, இந்த வைரஸின் செயல்திறன் குறைவு என்பதால் பெரியளவில் மனிதர்களிடையே பரவும் என்று மிகைப்படுத்திக் கூறக்கூடாது என தெரிவித்துள்ளனர்.