Saturday, May 3, 2025

போப் பிரான்சிஸ் காலமானார் - உலக தலைவர்கள் இரங்கல்

Pope Francis Vatican
By Sumathi 13 days ago
Report

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் காலமானார்.

போப் பிரான்சிஸ் மறைவு

கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ்(88). இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

pope francis

நுரையீரலில் இரட்டை நிமோனியா மற்றும் ஆஸ்துமா மூச்சுக்குழாய் அழற்சி ஏற்பட்டு சிக்கல்களை சந்தித்து வந்தார். அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இறந்தவர்களை தேடி தேடி திருமணம் செய்யும் பெண்கள் - காரணத்தை கேட்டீங்களா?

இறந்தவர்களை தேடி தேடி திருமணம் செய்யும் பெண்கள் - காரணத்தை கேட்டீங்களா?

தலைவர்கள் இரங்கல்  

தொடர்ந்து சிறிது உடல்நலம் தேறி வாடிகன் திரும்பினார். மேலும், நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி வாடிகன் சதுக்கத்தில் குழுமியிருந்த மக்களை பார்த்து சந்தோஷத்துடன் கையசைத்தார்.

போப் பிரான்சிஸ் காலமானார் - உலக தலைவர்கள் இரங்கல் | Pope Francis Passes Away

பின்னர் சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் ஈஸ்டர் தின வாழ்த்துகள் என்று வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் தனது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்துவ மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1,000 ஆண்டுகளுக்கும் மேலான கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில், ஐரோப்பாவிற்கு வெளியே பிறந்த அல்லது வளர்ந்த முதல் போப் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.