மியான்மர் நிலநடுக்கத்தை முன்னமே கணித்த பாபா வாங்கா - ஜூலையில் பயங்கர சுனாமி
2025-ஆம் ஆண்டிற்கான பாபா வங்கா கூறிய அதிர்ச்சி கணிப்புகளை பார்ப்போம்.
பாபா வங்கா
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார்.
அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது. 1996ல் மரணமடைந்தார். இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது.
குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை நிஜமாகியுள்ளன.
பூமி-செவ்வாய்
சமீபத்தில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,000-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 2025-ஆம் ஆண்டில் ஒரு பெரிய இயற்கை பேரழிவு ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஒரு பெரிய உலகளாவிய நிதி நெருக்கடியை முன்னறிவித்துள்ளார்.
இது பல நாடுகளை மந்தநிலைக்குத் தள்ளும். மேலும், 2028ஆம் ஆண்டில் வெள்ளியில் ஆற்றலைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். 2033-ஆம் ஆண்டுக்குள் துருவப் பகுதிகளில் கடல் மட்டம் உயரும்.
2130-ஆம் ஆண்டில் மனிதர்கள் வேற்றுகிரகவாசிகளுடன் இணைவார்கள். 3005-ஆம் ஆண்டில் பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே ஒரு போர் இருக்கும் என கணித்துள்ளார்.