அழகு சிற்பமாய்.... ஐஸ்வர்யாவின் ‘பொன்னியின் செல்வன்’ போஸ்டர் வெளியீடு - வைரலாகும் புகைப்படம்
பொன்னியின் செல்வன்
தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக விளங்கும் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வனை வெற்றிகரமாக இயக்கி முடித்துள்ளார்.
இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
வரும் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் நடித்த விக்ரம் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகிக் கொண்டிருந்தது.
இப்போது, இப்படத்தின் போஸ்டர் அடுத்தடுத்து வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யாவின் போஸ்டர்
இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராய்யின் ‘நந்தினி’ கதாபாத்திரம் கொண்ட போஸ்டர் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அடடா... என்ன அழகு... அழகே பொறாமைப்படும் பேரழகியே... என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
காவலாளியை சராமரியாக அடித்து உதைக்கும் ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ்... - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!