பெண்கள் மட்டும் இல்லையென்றால் சினிமாவே கிடையாது - ஐஸ்வர்யா ராய் கருத்து
உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது.
உலகெங்கிலிருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவில், இந்த ஆண்டு இந்திய திரையுலகைச் சேர்ந்த ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். இணையத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பட்சன் மற்றும் ஆராத்யாவுடன் இருக்கும் புகைப்படம் வைரலானது.
இந்நிலையில், பெண்கள் இல்லாமல் சினிமா இல்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், பெண்கள் இல்லாமல் திரைப்படங்கள் எடுக்க முடியாது. அவர்கள் எப்பொழுதும் திரைப்படங்களின் ஒருங்கிணைந்த அங்கமாகவே இருந்திருக்கிறார்கள். ஆண், பெண் வேறுபாடின்றி திறமைக்கு ஆதரவும், வாய்ப்பும் தேவை என்று தெரிவித்துள்ளார்.