அமைச்சர் பொன்முடிக்கு தேதி குறித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் - முடிவுக்கு வந்த விசாரணை!

Tamil nadu DMK K. Ponmudy
By Sumathi Apr 25, 2024 08:45 AM GMT
Report

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடி

1996 -2001 திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார்.

k.ponmudy

இந்த காலகட்டத்தில் தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக 1.36 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடிக்கு எதிராக 2001ம் ஆண்டு அதிமுக அரசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்தது. தொடர்ந்து, வழக்கை தாமாகவே முன்வந்து மறு ஆய்வு விசாரணைக்கு எடுத்தார் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

களத்தில் இறங்கும் நீதிபதி ஆனந்த்; அமைச்சர்களுக்கு எகிறும் தலைவலி - என்ன நடக்கும்?

களத்தில் இறங்கும் நீதிபதி ஆனந்த்; அமைச்சர்களுக்கு எகிறும் தலைவலி - என்ன நடக்கும்?

விசாரணை ஒத்திவைப்பு 

மறுஆய்வு செய்வதை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், தலைமை நீதிபதி, வழக்கை சந்திக்க பொன்முடிக்கு அறிவுறுத்தினார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அமைச்சர் பொன்முடிக்கு தேதி குறித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் - முடிவுக்கு வந்த விசாரணை! | Ponmudy Assets Case Judge Anand Venkatesh

அப்போது, வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 18 முதல் 21ம் தேதி வரை நடத்தி முடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கிடையில், மற்றொரு சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால் அமைச்சர் பதவியை இழந்தார்.

இதன் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் கடந்த மார்ச் மாதம்தான் மீண்டும் அமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது.