நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திடீர் இடமாற்றம்; ஏன், அமைச்சர்களின் வழக்குகள் யார் கையில்?
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
2019ல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2020ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு மறுஆய்வு வழக்கை தாமாக முன்வந்து எடுத்து நடத்தினார். இதனைத் தொடர்ந்து, இதனிடையே மறு ஆய்வு வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை மாற்ற வேண்டும் என பொன்முடி உச்ச நீதிமன்றம் சென்றார்.
திடீர் இடமாற்றம்
பின், சுழற்சி முறையில் மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு ஆனந்த் வெங்கடேஷ் மாற்றப்பட்டார். மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் திரும்பிய அவர், அமைச்சர்களுக்கு எதிரான மறு ஆய்வு வழக்குகளின் விசாரணையை மேற்கொண்டார்.
பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஓபிஎஸ் ஆகியோருக்கு எதிரான மறுஆய்வு வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
எனவே, எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தொடர்புடைய வழக்குகளை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிக்கவுள்ளார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மதுரைக் கிளைக்கு மாற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video