களத்தில் இறங்கும் நீதிபதி ஆனந்த்; அமைச்சர்களுக்கு எகிறும் தலைவலி - என்ன நடக்கும்?
உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளின் விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடைபெறவுள்ளது.
நீதிபதி என்.ஆனந்த்
ஜனவரி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும்நீதிபதியாக என்.ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், தமிழக அமைச்சர் கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோரை சொத்துக் குவிப்பு மற்றும்
பரபரக்கும் அரசியல் களம்
ஊழல் வழக்குகளில் இருந்து கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது தொடர்பான உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் விதமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து இருந்தார். ஆனால், ஆனந்த் வெங்கடேஷ் மதுரைக்கு சென்றதால், இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக நடந்து வந்தது.
இந்நிலையில், அந்த துறை மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனையொட்டி, இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.