ஓபிஎஸ் விடுதலை; தீர்ப்பை எதிர்த்து நீதிபதி தாமாக முன்வந்து வழக்கு - திடீர் ட்விஸ்ட்!
ஓபிஎஸ் விடுதலை எதிர்த்து உயர் நீதிமன்ற நீதிபதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளார்.
ஓபிஎஸ் விடுதலை
சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் 2012-ல் தீர்ப்பு அளித்தது.
தற்போது அதனை எதிர்த்து உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வரவுள்ளது.
நீதிபதி வழக்கு
ஏற்கெனவே திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்களை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்ததற்கு எதிராக
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாமாக முன் வந்து மேல்முறையீடு செய்து விசாரணைக்கு எடுத்த நிலையில் தற்போது நான்காவதாக அதிமுகவில் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.