மானம் இருந்தா ஓபிஎஸ் இனியும் இப்படி பண்ணக்கூடாது...ஜெயக்குமார் அதிரடி
தங்கள் தரப்பிற்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜெயக்குமார் ஓபிஎஸ் குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் நிறைவேற்றப்பட்ட பொதுகுழுவும், தீர்மானங்களும் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுகவின் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்சி அலுவலகத்திலிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, எடப்பாடி பழனிசாமி சொன்னது போல உண்மை, தர்மம், நியாயம் வென்றுள்ளது என குறிப்பிட்டு, தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் நீதிமன்றங்களால் ஓ.பி.எஸ் தரப்பினர் குட்டு வாங்கியுள்ளார்கள் என தெரிவித்தார்.
மானம் இருந்த பயன்படுத்தாதீர்கள்
மேலும்,ஓபிஎஸ் தரப்பிற்கு மானம் இருந்தால் இனியும் தொடர்ந்து கட்சி பெயர், அதிமுக கட்சியின் கொடி, கரை வேட்டி போன்றவற்றை பயன்படுத்த கூடாது என கட்டமாக தெரிவித்துக்கொண்டு, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றாலும், தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே அமையும் என கூறினார்.
தொடர்ந்து திமுக குறித்து பேசிய அவர், 2 ஆண்டுகள் ஆட்சியில் எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, தற்போது நீட் தேர்வு விவகாரத்தில் நாடகமாடுகின்றனர் என்று விமர்சித்து, கண்ணீரே வராமல் கண்ணீர் விட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படும் என கிண்டலடித்து அதிமுகவின் கொள்கை, கோட்பாடு எல்லாம் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லாது என்பதுதான்” என கூறினார்.