தலைமை நீதிபதியின் அனுமதியே வாங்கல.. முன்னரே ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை - நடக்கப்போவது என்ன?
தலைமை நீதிபதியின் அனுமதி பெறாமல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்குகளை விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனந்த் வெங்கடேஷ்
தமிழக அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வளர்மதி உள்ளிட்டோர் பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் விடுதலை செய்த வழக்குகளின் தீர்ப்பை மறு ஆய்வு செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார்.
வழக்கு விசாரணை
இதற்கிடையில், இத்தகைய மறு ஆய்வு வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் அனுமதி நீதிபதி ஆனந்த் வெங்கடெஷ் பெற்றுள்ளாரா? இல்லையா? என பதில் மனுத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
தொடர்ந்து பதில் மனுவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதியை பெறுவதற்கு முன்னதாகவே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கு விசாரணையை தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அப்பீல் மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.
அதில், ஒப்புதல் கடிதத்தை தலைமை நீதிபதி படிக்கும் முன்னரே- ஒப்புதல் பெறாமல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார் என்பதை முன்வைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தரப்பு தடை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.