எனக்கு இந்தி தெரியாது.. ஐபிசி என்றே சொல்வேன் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

Tamil nadu Madras High Court
By Jiyath Jan 25, 2024 03:41 AM GMT
Report

இந்தி தெரியாது என்பதால் ஐபிசி, சிஆர்பிசி என பழைய பெயர்களிலேயே தொடர்ந்து குறிப்பிடுவேன் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். 

பெயர் மாற்றம்

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை முறைச்சட்டம், இந்திய சாட்சிகள் சட்டத்தை மத்திய அரசு முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்க்ஷ்யா சன்ஹிதா என பெயர் மாற்றம் செய்துள்ளது.

எனக்கு இந்தி தெரியாது.. ஐபிசி என்றே சொல்வேன் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்! | I Dont Know Hindi Say Ipc Justice Anand Venkatesh

இந்த பெயர் மாற்றம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புதிய சட்டங்கள் இந்தாண்டு முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிபதி கருத்து 

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு குற்ற வழக்கு விசாரணையின்போது நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், குற்றவியல் சட்டத்தின் காலவரம்பு குறித்து அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

எனக்கு இந்தி தெரியாது.. ஐபிசி என்றே சொல்வேன் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்! | I Dont Know Hindi Say Ipc Justice Anand Venkatesh

புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள சட்டங்களின்பெயரை அரசு வழக்கறிஞரால் சரியாக உச்சரிக்க முடியவில்லை. அப்போது நீதிபதி, குற்றவியல் சட்டங்களை இந்தியில் பெயர் மாற்றம் செய்திருந்தாலும் எனக்கும் இந்தி தெரியாது என்பதால் ஐபிசி, சிஆர்பிசி என பழைய பெயர்களிலேயே தொடர்ந்து குறிப்பிடுவேன் என தெரிவித்துள்ளார்.