இந்த ஆண்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் எது தெரியுமா? இப்படி வழிபட்டால் வீட்டில் செல்வம் தான்!
தை மாதப் பிறப்பில் பாரம்பரிய திருநாளாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கல்
எந்த நேரத்தில் பொங்கல் வைத்து, என்ன படைத்து வழிபட்டால் ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும், உழவுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் சூரியன், மாடு உள்ளிட்டவற்றிற்கு நன்றி செலுத்தி, வழிபடும் பண்டிகையாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நல்ல நேரம்?
2024ம் ஆண்டில் ஜனவரி 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை போகிப் பண்டிகையும், ஜனவரி 15ம் தேதி திங்கட்கிழமை தைப்பொங்கலும், ஜனவரி 16ம் தேதி செவ்வாய்கிழமை மாட்டுப்பொங்கலும், ஜனவரி 17ம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது.
காலை 06.30 முதல் 07.30 வரை அல்லது காலை 09.30 முதல் 10.30 வரை பொங்கல் வைக்கலாம். காலை 11 மணி முதல் பகல் 01 மணி வரை மாட்டுப் பொங்கல் வைக்கலாம். பொங்கல் வைத்த பிறகு பூஜை செய்யும் போது சர்க்கரை பொங்கல், கரும்பு ஆகியவற்றுடன் கல் உப்பு, துவரம் பருப்பு, வெல்லம், பச்சரிசி அல்லது நெல் போன்றவற்றையும் வாங்கி வைத்து வழிபடலாம்.
இவையெல்லாம் மகாலெட்சுமி வாசம் செய்யும் பொருட்களாக கருதப்படுவதால் இவற்றை வைத்து பூஜை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.