கடும் நிதி நெருக்கடியிலும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது - அமைசர் கே.என்.நேரு

Thai Pongal M K Stalin K. N. Nehru trichy
By Karthick Jan 10, 2024 09:00 PM GMT
Report

 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் துவங்கி வைத்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பு

அனைத்து குடும்ப அட்டைக்காரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.

kn-nehru-comments-on-pongal-parisu-thogupu

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு போன்றவற்றுடன் சேர்த்து 1000 ரூபாயும் அட்டைக்காரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

நிதி நெருக்கடியிலும்

இந்நிலையில், இந்த பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் தமிழக அமைச்சர் கே.என்.நேரு. திருச்சி பீம நகரில் உள்ள புதிய நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்.

என் காச எடுத்து கொடுக்குறது சேவை எப்படி ஆகும்..?சரமாரி கேள்வி..!

என் காச எடுத்து கொடுக்குறது சேவை எப்படி ஆகும்..?சரமாரி கேள்வி..!

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, கடுமையான நிதி நெருக்கடி இருக்கும் சூழலில் கூட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக முதல்வர் ஆயிரம் ரூபாய் வழங்கியிருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

kn-nehru-comments-on-pongal-parisu-thogupu

எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் அதற்கு மத்தியில் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கிய முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவதாக குறிப்பிட்டார்.