வெட்கம், மானமெல்லாம் இல்லை; தலைகுனியுங்கள் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி கொதிப்பு

M K Stalin Coimbatore Edappadi K. Palaniswami Crime
By Sumathi May 13, 2025 12:30 PM GMT
Report

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், முதல்வரை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

mk stalin - edappadi palanisamy

தொடர்ந்து அதிமுகவை விமர்சித்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு.

உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது. வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள்! யார் வெட்கித் தலை குனிய வேண்டும்?

”அடிக்காதீங்க அண்ணா” நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கொடூரம் - 9 பேருக்கு சாகும்வரை சிறை

”அடிக்காதீங்க அண்ணா” நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கொடூரம் - 9 பேருக்கு சாகும்வரை சிறை

இபிஎஸ் பதிலடி 

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! #யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!

அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், CBI விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று, மூத்த வக்கீல்களை நியமிக்க, மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!

நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் POCSO வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.