பார்த்ததும் நடுங்கிய பெண் காவலர்; விரட்டி வெட்டிய கணவன் - குலைநடுங்க வைத்த சம்பவம்!
கணவன் பெண் காவலரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம்
காஞ்சிபுரம், விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவருபவர் டில்லி ராணி. இவர் மேகநாதன் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இரண்டு பேருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து ஆறு மாதமாக பிரிந்து வந்துள்ளனர். இந்நிலையில், டில்லி ராணி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார்.
கணவன் வெறிச்செயல்
அப்போது மேகநாதன், டில்லி ராணி ஓட்டி வந்த வாகனத்தை வழிமறித்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் காவலரை, கத்தியை எடுத்து வெட்ட முற்பட்டுள்ளார். இதனைக் கண்டு அஞ்சிய டில்லி ராணி தப்பி ஓடியுள்ளார். இருப்பினும், துரத்திச்சென்று சரமாரியாக வெட்டியுள்ளார்.
பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த டில்லி ராணியை மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தகவலறிந்து உடனே விரைந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேகநாதனை கைது செய்துள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.