ஓ.பி.எஸ்ஸுக்கு ஏன் ஓட்டு போடல..ஓட ஓட விரட்டி அறிவாள் வெட்டு - அதிர்ச்சி சம்பவம்!
ஓ பன்னேர்செலவத்துக்கு வாக்களிக்கவில்லை என்று ஒருவரை வெட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பி.எஸ்ஸுக்கு ஓட்டு போடல
நடப்பாண்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க கூட்டணி சார்பில் பலாப்பழ சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டார்.
இந்த நிலையில், வாக்கு பதிவு நாளன்று சாயல்குடி அருகே உள்ள கடுகுசந்தை சத்திரம் என்னும் கிராமத்தில் வாகனத்தில் வந்த ஒருவருக்கும், மற்றொருவருக்கு மோதல் ஏற்பட்டது.பின்னர் இரு தரப்பினர் இடையேயான தகராறாக மாறியது.
விரட்டி அறிவாள் வெட்டு
அப்போது, ஒரு தரப்பை சார்ந்தவர்கள் மற்றொரு தரப்பினரின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ''ஓ.பி.எஸ்ஸின் பலாப்பழ சின்னத்திற்கு ஏன் ஓட்டுப்போடவில்லை'' எனக் கேட்டு தாக்குதல் நடத்தினர். அப்பகுதியை சேர்ந்தவர்களை வாளால் ஓட ஓட விரட்டி வெட்டியதாகச் சொல்லப்படுகிறது.
இதில், செல்வி, வெள்ளத்தாய், மணிகண்டன், முகேஷ்கண்ணன், இருளையா, சிவமுருகன், அரவிந்த் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்ந்து, காயமடைந்தவர்களின் உறவினர்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, "ஓ.பி.எஸ்ஸுக்கு ஏன் ஓட்டு போடவில்லை எனக் கேட்டே. எங்களை விரட்டி விரட்டி வெட்டி, கொடூரமாகத் தாக்குதல் நடத்தினார்கள். எனவே அவர்களை கைது செய்ய வேண்டும்" என போலீசாரிடம் கூறினர்.
இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், கீழக்கரை டி.எஸ்.பி சமாதானப்படுத்தி மறியலை கைவிட செய்தார்.