‘முஸ்லிமா நீ..ஆதார் அட்டை எங்கே?’ - மனநலம் குன்றியவரை அடித்தே கொன்ற பாஜக பிரமுகர் ; வீடியோ வைரல்!

BJP
By Swetha Subash May 22, 2022 05:30 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என நினைத்து ஜெயின் மதத்தை சேர்ந்த முதியவரை பாஜக நிர்வாகி கடுமையாக தாக்கியதில் அவர் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், ரத்லாம் மாவட்டத்தின் சிர்சா கிராமத்தில் வசித்து வருபவர் மனநலம் பாதிக்கப்பட்ட பவர்லால் ஜெயின்.

65 வயது முதியவரான பவர்லால் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற மதம் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தனது குடும்பத்தினருடன் சென்றிருந்த நிலையில், வழி தவறி வேறெங்கோ சென்றுள்ளார்.

இது குறித்து, அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் முதியவர் காணாமல் போன இரு தினங்களுக்கு பிறகு நீமுச் மாவட்டத்தில் உள்ள ராம்புரா சாலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே,பாஜக பிரமுகர் தினேஷ், முதியவர் ஜெயினை கடுமையாக தாக்கி அவரது ஆதார் அட்டையைக் கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில்,முதியவரை பார்த்து நீ ஒரு முஸ்லிமா?,உன் பெயர் முகமதுவா? ,ஆதார் அட்டை எங்கே? என்று அந்த பிரமுகர் கேட்பதாக கூறப்படுகிறது.