கள்ளக் காதலனுடன் பைக்கில் சென்ற மனைவி - நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்!

Tamil nadu Chennai Crime
By Jiyath Jan 09, 2024 03:29 AM GMT
Report

தகராறு

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ரஹமத்துல்லா (35) சென்னை, புதுவண்ணாரப்பேட்டையில் தங்கி பெயிண்டராக வேலை செய்து வந்தார்.

கள்ளக் காதலனுடன் பைக்கில் சென்ற மனைவி - நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்! | Husband Cut Wife Run In The Middle Of The Road

இவர் கடந்த 2021-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சனாப் (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1½ வயதில் ஒரு குழந்தை உள்ளது. இதற்கிடையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 மாதங்களாக சனாப், கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இருந்தும் அவ்வப்போது கணவன்-மனைவி இருவரும் சந்தித்து பேசி வந்தனர். ஆனால் கடந்த 10 நாட்களாக கணவரிடம் பேச சனாப் மறுத்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ரஹமத்துல்லா, மனைவியை பின்தொடர்ந்தபோது, சனாப் வேறொரு வாலிபருடன் கள்ளக் காதலில் இருப்பது தெரிய வந்துள்ளது.

8-ம் வகுப்பு மாணவிகள் திடீர் மாயம் - BTS-ஐ காண ரயில் ஏறி கொரியா புறப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

8-ம் வகுப்பு மாணவிகள் திடீர் மாயம் - BTS-ஐ காண ரயில் ஏறி கொரியா புறப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

மனைவிக்கு வெட்டு

மேலும் அவர்கள் இருவரும் பைக்கில் நெருக்கமாக அமர்ந்து செல்வதையும் ரஹமத்துல்லா பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்து மனைவி சனாப்பை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி பயங்கரமாக வெட்டியுள்ளார்.

கள்ளக் காதலனுடன் பைக்கில் சென்ற மனைவி - நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்! | Husband Cut Wife Run In The Middle Of The Road

இதில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு, சனாப் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் 25 இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஹமத்துல்லாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். /