வாக்குமூலம் அளித்த மன்சூர் அலிகான் - த்ரிஷாவிடம் விசாரணை நடத்த முடிவு!
நடிகை த்ரிஷாவிடம் காவல் துறை விசாரிக்க முடிவு செய்துள்ளது.
நடிகை த்ரிஷா
நடிகர் மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு த்ரிஷா தனது சமூகவலைதள பதிவில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, பல திரைப்பட பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
விசாரணை நடத்த முடிவு
இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே அவ்வாறு பேசவில்லை என கூறினார். இதனையடுத்து, மனு மீதான உத்தரவை நீதிபதி அல்லி ஒத்திவைத்தார்.
இதற்கிடையில், மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு அறிக்கை விடுத்தார். எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு. இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மன்னிப்பை த்ரிஷாவும் ஏற்பதாக தெரிவித்திருந்தார்.
தற்போது, த்ரிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.