எஸ்.பி அலுவலகம்; இரவில் பூட்டிய அறையில் தனிமையில் போலீஸ் ஜோடி - திடீரென கதவை தட்டிய டிஎஸ்பி!
எஸ்.பி அலுவலகத்தில் போலீஸ் ஜோடி தனிமையில் இருந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
எஸ்.பி அலுவலகம்
மயிலாடுதுறை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆரோக்கிய நாதபுரத்தில் செயல்பட்டுவருகிறது. இங்கு, கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி-க்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீஸார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
இங்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணிபுரிபவர் காவலர் வினீத். திருமணமானவர். இவர் குத்தாலம் காவல் நிலையத்தில் பெண் போலீஸாகப் பணிபுரியும் ஒருவருடன் எஸ்.பி அலுவலகத்திலுள்ள ஓய்வு அறையில் இரவு நேரத்தில் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
போலீஸ் ஜோடி அட்டூழியம்
இதுகுறித்து,தகவலறிந்து வந்த டி.எஸ்.பி அலுவலகத்துக்குச் சென்று பார்த்ததில் கதவு உள்பக்கம் சாத்தப்பட்டிருந்திருக்கிறது. தொடர்ந்து அவர் கதவை தட்டியதில் வினீத்தும், ரேகாவும் உள்ளே நின்றிருந்திருக்கின்றனர். உடனே அவர்களை எச்சரித்துள்ளார். அதன்பின் இந்த விவகாரம் எஸ்.பி மீனாவுக்குச் சென்றதில், இருவரையும் பணியிடை நீக்கம்செய்து உத்தரவிட்டுள்ளார்.
விசாரணையில், இரவுப் பணியை முடித்துவிட்டு கிளம்பிய ரேகா, பேருந்தில் மயிலாடுதுறைக்குச் சென்று இறங்கியுள்ளார். அங்கு காத்திருந்த வினீத், தன் இரு சக்கர வாகனத்தில் ரேகாவை அழைத்துக்கொண்டு எஸ்.பி அலுவலகத்துக்குச் சென்று அங்கே தனிமையில் இருந்தது தெரியவந்துள்ளது.