பெண் காவலர்களை மசாஜ், துணி துவைக்க சொல்லி உயர் அதிகாரி அட்டூழியம்!

Crime Bihar
By Sumathi Feb 12, 2023 08:17 AM GMT
Report

பெண் காவலர்களை உயர் அதிகாரி துணி துவைக்கவும், மசாஜ் செய்யவும் கூறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

உயர் அதிகாரி 

பீகார், பாட்னாவில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் பணியாற்றும் 7 பேலீஸார் அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அதில், நான்கு பெண் போலீசார் உட்பட 7 போலீசார், டிஎஸ்பி அளவிலான அதிகாரி ஒருவர் மற்ற காவல்துறை பணியாளர்களை மசாஜ் செய்யவும், துணி துவைக்கவும் கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

பெண் காவலர்களை மசாஜ், துணி துவைக்க சொல்லி உயர் அதிகாரி அட்டூழியம்! | Dsp Forces Lady Cops To Give Him Massage Bihar

இதுதொடர்பாக பாட்னாவின் மூத்த காவல் கண்காணிப்பாளருக்கு (SSP) புல்வாரி ஷெரீப்பின் துணை-பிரிவு காவல் அதிகாரி, (SDPO) சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை மசாஜ் செய்யவும் மற்றும்

குற்றச்சாட்டு

அவரது தனிப்பட்ட வீட்டில் அவரது துணிகளை துவைக்கவும் செய்ய வைக்கிறார்கள் என்று புகார் அளித்துள்ளார். மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட எஸ்.டி.பி.ஓ தங்களை அடிப்பதாகவும், மறுத்தால் சஸ்பெண்ட் செய்வதாக மிரட்டுவதாகவும் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.