வகுப்பறையில் மாணவனை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை : வைரலாகும்வீடியோ

Viral Video Uttar Pradesh
By Irumporai Jul 28, 2022 09:20 AM GMT
Report

அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவனை மசாஜ் செய்ய வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியர்

ஆசிரியர் பணி என்பது, அறப்பணி என பலரும் கூறி வரும் நிலையில் ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் செயல் மற்ற ஆசிரியர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம், ஹர்தோய் பகுதியில் உள்ள போகாரி தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஊர்மிளா சிங். இவர், தனது வகுப்பு மாணவர் ஒருவரை அழைத்து தனது கைகளுக்கு மசாஜ் செய்து விடச் கூறுகிறார்.

வைரலான வீடியோ

அவரின் பேச்சை கேட்டு அந்த மாணவன், நாற்காலியில் சொகுசாக அமர்ந்திருக்கும் ஆசிரியைக்கு மசாஜ் செய்கிறார். அப்போது, வகுப்பறையில் மற்ற மாணவ - மாணவியரும் அமர்ந்து உள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து ஆசிரியை ஊர்மிளா சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து, ஹர்தோய் அடிப்படை கல்வி அதிகாரி பிபி சிங் கூறுகையில், இந்த காணொளியை சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் வெளிச்சத்திற்கு வந்தது என தெரிவித்தார்.