எஸ்.ஐக்கு விழுந்த அரிவாள் வெட்டு.. தப்ப முயன்ற கொள்ளையன் - ஸ்பாட்டில் சுட்டு அதிரடி!
இளைஞரை போலீசார் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. n
கொள்ளையன்
மதுரை, தபால் தந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் லதா. இவர் இரவு 8 மணிக்கு கூடல் புதூர் பகுதியிலுள்ள வைகைநதி தெருவில் டூவீலரில் சென்றார். அப்போது, அவரை மற்றொரு டூவீலரில் பின்தொடர்ந்த இளைஞர் ஒருவர் அவர் அணிந்து இருந்த 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினார்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியது. இந்த செயின் கொள்ளையரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அப்பொழுது அவர் மதுரை காளவாசல் பகுதியிலுள்ள சம்பட்டிபுரத்தை சேர்ந்த 24 வயதான ஸ்டீபன் ராஜ் என்பது தெரியவந்தது.
துப்பாக்கி சூடு
இந்நிலையில், அந்த கொள்ளையர் செல்லூர் பகுதியில் சென்றபோது செல்லூர் காவல் நிலைய எஸ்ஐ ரஞ்சித் அவரை பிடிக்க முயன்றார். அப்போது, அவரது கையில் வைத்திருந்த அரிவாளால் எஸ்ஐயின் கை, முதுகுப்பகுதியில் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றார்.
அப்போது, அருகில் இருந்த ஆய்வாளர் ஆறுமுகம், கொள்ளையர் மீது 2 முறை துப்பாக்கியால் சுட்டத்தில் அவர் காயமடைந்து கீழே விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.