போலீஸ் அடித்ததால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை - வேலூரில் பரபரப்பு சம்பவம்
By Nandhini
வேலூர் அருகே பிரம்மபுரத்தில் நேற்றிரவு கெங்கையம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
இந்தத் திருவிழாவில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் விஜய் என்ற இளைஞரை போலீசார் தாக்கியுள்ளனர். இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான விஜய் இன்று காலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தன் மகன் தற்கொலைக்கு போலீசார் அடித்தது தான் காரணம் என்று கூறி இளைஞரின் உறவினர்கள் கொந்தளித்துள்ளனர்.
உரிய நடவடிக்கை எடுக்க கோரி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.