போலீசாருக்கு வந்த மொட்டை கடிதம்; செப்டிங் டேங்கில் எலும்புக்கூடு - அதிர்ச்சி!
15 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை போலீசார் கண்டறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி கொலை
கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த அனில் குமார் என்பவர் கலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு கலா திடீரென காணாமல் போனார்.
அவர் வேறு ஒரு நபருடன் சென்றுவிட்டதாக அணில் குமார் கூறி வந்துள்ளார். மேலும், இதுகுறித்து அனிலின் தந்தை காவல் நிலையத்தில் அளித்திருந்த புகார் தொடர் நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கலா காணாமல் போகவில்லை என்றும், கணவன் அனில் குமாரால் கொலை செய்யப்பட்டு வீட்டின் செப்டிக் டேங்கில் போடப்பட்டுள்ளதாகவும் போலீசாருக்கு ஒரு மொட்டை கடிதம் சென்றதாக கூறப்படுகிறது.
5 பேர் கைது
இதனை தொடர்ந்து அனில் குமாரின் வீட்டின் செப்டிக் டேங்கில் சோதனையிட்டதில், உருக்குலைந்த நிலையில் பெண்ணின் எலும்புக்கூடு கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணையில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அணில் குமார் இஸ்ரேலில் இருப்பதால், அவரை கேரளா கொண்டு வர முயற்சிகள் எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை போலீசார் கண்டறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.