ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்; முதல் வீடியோவே இப்படியா? டிரெண்டிங்
ஆனந்த் அம்பானி - ராதிகா திருமண கொண்டாட்ட வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
ஆனந்த் அம்பானி - ராதிகா
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்கிடையில், ஃப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
திருமணம் பாரம்பரியமான இந்து முறைப்படி அனைத்து முக்கியமான நிகழ்ச்சிகளையும், சடங்குகளையும் செய்ய முடிவு செய்து வீடு முதல் மண்டபம் வரையில் பிரம்மாண்ட அலங்காரங்களைச் செய்துள்ளது.
மாமெரு விழா
அதன்படி, மும்பையில் உள்ள அவர்களது காஸ்ட்லியான அன்டாலியா வீட்டில் நடைபெற்ற பிரமாண்ட மாமெரு விழாவுடன் அதிகாரப்பூர்வமாக ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தின் சடங்குகள் தொடங்கியுள்ளது.
குஜராத்தி திருமண பாரம்பரியத்தில், மணமகளின் தாய்மாமன் இனிப்புகள் மற்றும் நகைகள், சேலை போன்ற பரிசுப் பொருட்களுடன் மணமகளைச் சந்திக்கும் நிகழ்வு இது.
இதற்காக, வீடு சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் ஆரஞ்சு பூக்களால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. வீட்டின் வெளியே சில இசைக்கலைஞர்கள் நிற்கின்றனர். இதுதொடர்பான வீடியோ தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.