நாடே அசந்துப்போகும் அளவிற்கான ஏற்பாடு; ஆனந்த் அம்பானி - ராதிகா திருமண தேதி, இடம்!
ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
ஆனந்த் - ராதிகா
பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீடா அம்பானி. இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஸ்லோகா மேத்தாவுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
அது போல் ஈஷா அம்பானிக்கு திருமணமாகி இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஆனந்த் அம்பானி, தன்னுடன் படித்த ராதிகா மெர்சன்டை காதலித்து வந்தார். இதனையடுத்து, பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமணம்
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் கோலாகமாக நடந்தது. மேலும், இவர்களது திருமணம் லண்டனில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படும் என தகவல் வெளியானது.
ஆனால், ஜூலை 12-ஆம் தேதி மும்பையில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான பாந்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜூலை 12ல் திருமண நிகழ்ச்சி தொடங்கி, 13ல் தெய்வீக ஆசீர்வாத நிகழ்ச்சி, 14ல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், விஐபிக்கள், முக்கிய பிரபலங்கள் போன்ற பலர் பங்கேற்கவுள்ளனர்.