ஆனந்த் அம்பானி வருங்கால மனைவியுடன் திருப்பதியில் சாமி தரிசனம்!

Andhra Pradesh Mukesh Dhirubhai Ambani
By Sumathi Jan 26, 2023 10:38 AM GMT
Report

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்டுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

அம்பானி மகன்

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு விரைவில் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருடன் திருமணம் நடக்கவுள்ளது.

ஆனந்த் அம்பானி வருங்கால மனைவியுடன் திருப்பதியில் சாமி தரிசனம்! | Anand Ambani Radhika Merchant Darshan In Tirupati

முன்னதாக, ‘கொல் தானா’ என அழைக்கப்படும் பிரம்மாண்ட நிச்சயதார்த்த விழா, மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் ஆண்டிலா இல்லத்தில் நடைபெற்றது. அதில், பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சாமி தரிசனம்

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் வந்த முகேஷ் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் அதிகாலை நடைபெற்ற திருப்பாவாடை சேவையில் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.