எனக்கு இரண்டே ஆசைகள் தான்; அதுவும் மகன் திருமணத்தில்.. நீடா அம்பானி
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் திருமணத்திற்கு நீடா அம்பானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆனந்த் - ராதிகா
உலக அளவில் 11வது பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி. சுமார் 9,43,091 கோடி ரூபாய் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார்.
இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமன முந்தைய சடங்குகள் மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸில் நடைபெறவுள்ளது. 1000 ஏக்கர் பரப்பளவில் காடு, புனரமைக்கப்பட்ட சாலைகள், சுமார் 2,500 உணவு வகைகள் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த திருமண விழாவில் பங்கேற்க ஷாருக்கான், சல்மான் கான், அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நீடா அம்பானி வாழ்த்து
அதன்படி, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க், பாலிவுட் நடிகர்கள் தீபிகா படுகோன் அவரது கணவர் ரன்வீர் சிங், திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் குடும்பத்தினர், போனி கபூர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் வருகை புரிந்துள்ளனர். இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு அவரது தாய் நீடா அம்பானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை பொறுத்தவரை எனக்கு இரண்டு ஆசைகள் மட்டுமே உள்ளன. “முதலாவது நமது பாரம்பரியத்தை கொண்டாட வேண்டும், மற்றொன்று நமது கலை மற்றும் பண்பாட்டிற்கு மரியாதை செலுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.