'தன்பாலின உறவுக்கு மறுப்பு' 2 வாலிபர்களை கொன்று புதைத்த சித்த வைத்தியர் - அதிர்ச்சி வாக்குமூலம்!
தன்பாலின உறவுக்கு மறுத்த இரண்டு இளைஞர்களை கொன்று புதைத்த சித்த வைத்தியர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இளைஞர்கள் கொலை
தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான அசோக் ராஜன் என்பவர் கடந்த 13ம் தேதி மாயமானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அசோக் ராஜன் கடைசியாக சந்தித்த நபர் சித்த வைத்தியர் கேசவ மூர்த்தி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், கேசவ மூர்த்தி அப்பகுதி இளைஞர்களுக்கு அதிகளவில் செலவுகள் செய்து, அவர்களை தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார். அப்படி அறிமுகமான அசோக் ராஜனை தனது பாலியல் தேவைக்கு உட்படுத்தும் நோக்கில் அதிக போதை மருந்து கொடுத்துள்ளார்.
இதில் அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அசோக் ராஜனின் உடலை வெட்டி தனது வீட்டின் பின்புறத்தில் புதைத்ததாக காவல்துறையினர் விசாரணையில் கேசவ மூர்த்தி ஒப்புக் கொண்டுள்ளார். இதேபோல், கடந்த 2021ம் ஆண்டு முகமது அனாஸ் என்பவரையும் கொன்று புதைத்தாக கேசவ மூர்த்தி திடுக்கிடும் தகவல் கூறியுள்ளார்.
அதிர்ச்சி வாக்குமூலம்
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரின் வீட்டின் பின்புறத்தில் குழி தோண்டி ஆய்வு செய்தனர். அப்போது மேலும் சில மனித எலும்புத் துண்டுகள் கிடைத்துள்ளன.
அவைகள் முகமது அனாஸின் எலும்புகளா? அல்லது வேறு யாருடையதுமா? என்பதை அறிய டி.என்.ஏ. ஆய்வுக்காக, மருத்துவ ஆய்வுக் கூடத்திற்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த கொலைகள் தொடர்பாக கேசவ மூர்த்தி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் "என்னுடன் ஓரினச்சேர்க்கை தொடர்பிலிருந்த அசோக் ராஜன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.
எனவே ஆத்திரமடைந்து அவரை கொன்றேன். இதேபோல என்னுடன் தொடர்பில் இருந்த முகமது அனாஸ் என்ற இளைஞரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார். எனவே கோபத்தில் அவரையும் கொன்றேன்” என்று சித்த வைத்தியர் கேசவ மூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.