தமிழகத்தில் தாக்குதல் நாடகம் ஆடிய அயோத்தி பெண் துறவி - உண்மை அம்பலமானதும் ஓட்டம்!
பெண் துறவி அளித்தது பொய் புகார் என்று தெரியவந்ததை அடுத்து, அவர் மீது பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெண் துறவி
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த சப்ரா பதக் என்ற பெண் துறவி தனது தந்தை மற்றும் சகோதரர் உடன் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை மேற்கொண்டார். இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை பரமக்குடி வந்தனர்.
அப்போது சிலர் தங்களை வழிமறித்து கற்களைக் கொண்டுதாக்கியதாகவும், காரை சேதப்படுத்தியதாக அந்த பெண் துறவி புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பொய் புகார்
அதில் பெண் துறவியின் சகோதரர் சாலையிலிருந்து கற்களை சேகரித்து காருக்குள் வைக்கும் காட்சி பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீண் வதந்தியை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட பெண் துறவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து அறிந்த அந்த பெண் துறவி தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமையே சொந்த ஊர் திரும்பியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து எதற்காக பெண் துறவி பொய் புகார் கொடுத்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.