மேற்கு வங்கத்தில் சுவாரஸ்யம் - எதிர், எதிர் வேட்பாளர்களாக தேர்தலில் களமிறங்கும் தம்பதி!
ஒரே தொகுதியில் முன்னாள் தம்பதி இருவரும் எதிரெதிர் வேட்பாளர்களாக களமிறங்குவது ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.
வேட்பாளர்கள்
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாத தொடக்கத்தில் மேற்கு வங்காளத்தின் பாங்குரா மாவட்டத்திற்கு உட்பட்ட பிஷ்னுபூர் தொகுதியில், பாஜக சார்பில் சவுமித்ரா கான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் அதே தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் சுஜாதா மொண்டல் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து பிரிந்தவர்கள் ஆவார்கள்.
சுவாரஸ்யம்
இந்த தம்பதி கடந்த 2020-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டது. சவுமித்ரா கான் 2019- ஆண்டு மக்களவை தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதேபோல் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக, சுஜாதா தன்னை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் ஒரே தொகுதியில் முன்னாள் தம்பதி இருவரும் எதிரெதிர் வேட்பாளர்களாக களமிறங்குவது ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.