நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அமல் - மத்திய அரசு அறிவிப்பு!

Tamil nadu BJP Narendra Modi Government Of India India
By Jiyath Mar 11, 2024 01:28 PM GMT
Report

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடுமுழுவது அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

குடியுரிமை திருத்தச் சட்டம் 

பாஜக தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளிலிருந்து கடந்த 2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக இந்தியா வந்த முஸ்லிம் அல்லாத,

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அமல் - மத்திய அரசு அறிவிப்பு! | Citizenship Amendment Act Implemented

மதச் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிறது. அதாவது ஹிந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகளுக்கு குடியுரிமை வழங்குகிறது.

பாஜக ஆதரவு கூட்டம்: திமுகவின் வெற்றி குறித்து பேசிய நடிகை கஸ்தூரி - நழுவிய அர்ஜுன் சம்பத்!

பாஜக ஆதரவு கூட்டம்: திமுகவின் வெற்றி குறித்து பேசிய நடிகை கஸ்தூரி - நழுவிய அர்ஜுன் சம்பத்!

அமல்படுத்தப்பட்டது 

ஆனால் இந்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி, போராட்டங்களும் வெடித்தன. இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் மத்திய அரசு கிடப்பில் போட்டிருந்தது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அமல் - மத்திய அரசு அறிவிப்பு! | Citizenship Amendment Act Implemented

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடுமுழுவது அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அரசிதழில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.