கலவர பூமியான மேற்கு வங்காளம், கட்சிகளுக்கு இடையே மோதல் - 12 பேர் உயிரிழப்பு!
மேற்கு வங்காளத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேர்தல்
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிக்கை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்தனர். மேலும் வேட்புமனுத் தாக்கலின் போது பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் பின்னர் வன்முறையாக மாறி 12 வயது சிறுவன் உள்ளிட்ட 18 பேர் வரை உயிரிழந்தனர். இன்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
கலவரம்
இந்நிலையில், வாக்குப்பதிவு இன்று காலை 7 அளவில் தொடங்கியது. அதில் பல்வேறு இடங்களில் மக்கள் காலையில் இருந்து வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து வருகின்றனர். இங்கு வன்முறையை தவிர்ப்பதற்கு சுமார் 65 ஆயிரம் மத்திய காவல் படை போலீசாரும், 70 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
மேலும், கூச்பெகார் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கி சில நிமிடங்களிலேயே வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைத்தனர். தொடர்ந்து, பர்கானாஸ் மாவட்டத்தின் பிர்காச்சாவில் உள்ள வாக்குச்சாவடியில் சுயேச்சை வேட்பாளரின் பூத் ஏஜென்ட் அப்துல்லா கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது, அதனால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.