ராமேஸ்வரம் மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவு - இலங்கை நீதிமன்றம் !

Sri Lanka Sri Lanka Magistrate Court
By Jiyath Jul 09, 2023 04:17 PM GMT
Report

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்களை வரும் வரும் ஜூலை 21-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீனவர்கள் சிறைபிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 3000 க்கும் மேற்படட மீனவர்கள் 461 விசைப்படகுகளில் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவு - இலங்கை நீதிமன்றம் ! | Rsrm Fishermen Jailed Till July 21 Srilankacourt

அதனைத்தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி லியோ மற்றும் பாலா ஆகியோரின் இரண்டு விசைப்படகுகளையும் அதில் மீன்பிடிக்க சென்ற 15 மீனவர்களையும் சிறைப்பிடித்து காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர் .

சிறையில் அடைக்க உத்தரவு

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து மீனவர்கள் 15 பேரையும் வரும் ஜூலை 21-ந்தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.