நடுரோட்டில் சாதியை கூறி கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்கள் - பரபரப்பு!

Tiruvannamalai
By Vinothini Nov 03, 2023 06:31 AM GMT
Report

தமிழக காவலர்கள் பட்டியலினத்தவரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல்

திருமண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தோக்கவாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா, அவரின் மனைவி, மகன் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, அப்பொழுது அங்கு வந்த உதவி ஆய்வாளர் முருகன், காவலர்கள் நம்மாழ்வார், விஜயகுமார் ஆகியோர் இவர்கள் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது சாதியை கூறி தாக்க தொடங்கினர்.

police-attacked-sc-caste-family-in-road

அவர்கள் வைத்திருந்த லத்தியால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

கார் கண்ணாடியை உடைத்து சேலையை திருடிய கொள்ளையர்கள் - ஷாக்!

கார் கண்ணாடியை உடைத்து சேலையை திருடிய கொள்ளையர்கள் - ஷாக்!

நீதிமன்றம்

இந்நிலையில், தங்களைத் தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று பேர்மீதும் வழக்கு பதிவுசெய்யக் கோரி ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, "சாதிப் பெயரைக் குறிப்பிட்டு தாக்கிய மூன்று காவலர்கள்மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.

police-attacked-sc-caste-family-in-road

மேலும், பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் தலா 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இழப்பீட்டுத் தொகையை காவலர்கள் மூன்று பேரிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

காவலர்கள் மூன்று பேர்மீது வழக்கு பதிவுசெய்து, 12 வாரங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை அவர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.