கார் கண்ணாடியை உடைத்து சேலையை திருடிய கொள்ளையர்கள் - ஷாக்!
கொள்ளையர்கள் கார் கண்ணாடியை உடைத்து சேலையை திருடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம்
விழுப்புரம் மாவட்டம், திருவக்கரையைச் சேர்ந்தவர் பழனி, இவரது மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதனால் இருவீட்டாரும் பட்டு சேலை எடுப்பதற்காக காரில் காஞ்சிபுரம் வந்தனர்.
பின்னர் அவர்கள் காந்தி சாலையில் உள்ள தனியார் பட்டு சேலை கடையில் ரூ.60 ஆயிரத்திற்கு 4 பட்டு சேலைகளை வாங்கி விட்டு காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றனர். அப்பொழுது இவர்கள் காரை கோபுரம் அருகே நிறுத்திவிட்டு சாமி தரிசனத்திற்கு சென்றனர்.
திருட்டு
இந்நிலையில், சாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பு வந்து பார்த்தபொழுது ஒரு காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப், ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 4 பட்டு சேலைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை காணவில்லை.
காரில் உள்ளே இருந்த ஐபோன் மட்டும் தப்பியது. திருமணத்திற்கு எடுத்த பட்டுச்சேலைகள் கொள்ளை போனதால் திருமண விட்டார் சோகத்தில் உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.