சிங்கம் பட பாணியில் காரில் தப்பிச்சென்ற வழிப்பறி கொள்ளையர்களை மடக்கி பிடித்த போலீசார் - குவியும் பாராட்டு
உடுமலையில் வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பிய வாலிபர்களை போலீசார் காரில் துரத்தி சென்று மடக்கிப் பிடித்தனர்.
பொள்ளாச்சி உடுமலையில் தங்கராஜ் இவரிடம் நேற்று நான்கு வாலிபர்கள் மிரட்டி அவர் வைத்திருந்த கார் மற்றும் அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து தங்கராஜ் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரை அடுத்து காவல் நிலையத்தில் இருந்து கண்ட்ரோல் ரூமுக்கு வாலிபர்கள் தப்பிச் செல்வதாக தகவல் அளித்தனர்,
கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி ஹைவே பேட்ரோல் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
பொள்ளாச்சி திப்பம்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது மாருதி கார் ஒன்று நிற்காமல் வேகமாக சென்றது,போலீசார் சினிமா பாணியில் மாருதி காரை பின்தொடர்ந்துசின்ன பாளையம் பகுதியில்காரை மடக்கி பிடித்தனர்.
போலீசார் விசாரணையில் தங்கராஜ் இடம் கார் மற்றும் 3 பவுன் பறித்த ராபின், அருள்ராஜ், சேவாக், மாரியப்பன் என விசாரணையில் தெரியவந்தது.
கார் மற்றும் நகையை பறிமுதல் செய்த போலீசார் தளி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் 4 பேரை அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்,
சினிமா பாணியில் வாகனத்தில் வேகமாகச் சென்று வழிப்பறி கொள்ளையர்களை மடக்கி பிடித்த போலீசாரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாரட்டினர்.