காதலால் தாயிடம் பறிக்கப்பட்ட பிஞ்சு குழந்தை - 11 மாத கால போராட்டத்திற்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
கேரள தம்பதியின் பிறந்த ஆண் குழந்தையை 3 நாட்களில் பறிக்கப்பட்ட நிலையில் 11 மாதங்களுக்கு பிறகு அக்குழந்தை கண்டுபிடித்துள்ளனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் பேரூர் கடைப்பகுதியில் ஆளும் கட்சியான சிபிஎம் கட்சியின் ஏரியா கமிட்டி உறுப்பினராக உள்ளார். இவரின் மகள் அனுபமா.
இவர் அப்பகுதியில் சக கட்சி உறுப்பினராக உள்ள அஜித் என்பவரை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தார். அஜித் பட்டியலினத்தவரை சேர்ந்தவர். இதனால், வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அஜித்தை அனுபமா திருமணம் செய்து கொண்டார். அஜித் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்துக்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்.
இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து அனுபமா கர்ப்பம் அடைந்தார். இதனையடுத்து, மகளை சேர்ப்பதாக கூறிய ஜெயச்சந்திரன் தாய்மை காலம் என்பதால் கூடவே தங்க வைத்துக்கொண்டார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனுபமாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 3 நாட்களில் அனுபமாவிடமிருந்து குழந்தையை பிரித்த ஜெயச்சந்திரன் வேறொரு குடும்பத்திற்கு தத்து கொடுத்து விட்டார். முதலில் இதுபற்றி தெரியாத அனுபமா 6 மாதங்களுக்கு பிறகு இந்த விஷயம் தெரியவந்தது. தனது குழந்தையை தேடி கொண்டிருந்தார்.
தனது குழந்தையை 6 மாதமாக தேடி அலைவதாக கூறி, கேரள சட்டசபைக்கு வெளியே போராட்டம் நடத்தினார். குழந்தையை மீட்க 6 மாதங்களாக அரசு அமைப்புகளில் முறையிட்டு போராடி ஊடகத்துக்கு தெரிவித்தார்.
இதனையடுத்து, காவல்துறை, நீதிமன்றம் வாயிலாக கேரள அரசு குழந்தையை தேடும் முயற்சியில் இறங்கியது. கடந்த ஞாயிறு கிழமை, கேளராவிலிருந்து ஆந்திர தம்பதிக்கு குழந்தை தத்துக்கொடுக்கப்பட்டதாக தெரியவந்தது.
இதனையடுத்து, குழந்தையை திருவனந்தபுரத்துக்கு அழைத்து வரப்பட்டது. பின்னர், காந்தை மற்றும் அனுபமா, அஜித் ஆகியோரும் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது.
முடிவில், அவர்களது குழந்தைதான் என்பது உறுதியானது. இதனையடுத்து, குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக குழந்தைகள் நலக் குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்படி, குழந்தை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் அனுபமா மற்றும் அஜித்திடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
இதன்மூலம் அனுபமா – அஜித்தின் 11 மாத கால போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில், குழந்தையை ஆந்திர தம்பதிகள் அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்ள அனுபமா அனுமதி கொடுத்துள்ளார். மேலும், குழந்தையை வளர்த்த ஆந்திர தம்பதிக்கு அனுபமா நன்றி தெரிவித்திருக்கிறார்.