பெண்கள் செய்த காரியம்; கரடி பொம்மை வேடத்தில் சென்று போலீசார் சம்பவம் - வைரல் Video!
போதைப் பொருட்கள் விற்பனை செய்த பெண்களை கரடி பொம்மை வேடத்தில் சென்று போலீசார் கைது செய்துள்ளனர்.
போதைப் பொருள்
பெரு நாட்டில் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை பிடிப்பதற்காக 'கிரீன் ஸ்குவாட்' என்ற புதிய பிரிவை காவல்துறையினர் துவங்கியுள்ளனர். இதன் மூலம் வீடுகளில் வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்து வரும் குழுக்களை பிடிக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும், இதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு அந்த கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் பெரு தலைநகர் லிமாவில் பெண் ஒருவர் போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவலர் ஒருவர், கரடி பொம்மை வேடமிட்டு கையில் சாக்லேட் பெட்டியுடன் அந்த பெண்னின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பறிமுதல்
அப்போது அந்த பெண் வீட்டிற்கு வெளியே வந்து அந்த பொம்மையை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு நின்றுள்ளார். பின்னர் கரடி பொம்மை வேடத்தில் இருந்த காவலர் சாக்லேட் போட்டியை அவரிடம் கொடுத்துள்ளார்.
அந்த பொட்டியை வாங்குவதற்காக அந்த பெண் கையை வெளியே நீட்டியுள்ளார். அப்போது அவரது கரங்களில் கை விலங்கு பூட்டி, போலீஸார் அந்த பெண்ணை கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் மேலும் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பெண்களிடம் இருந்து சுமார் 1000 கொக்கைன் போதை சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோவை பெரு நாட்டு போலீஸார் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.