1,700 ஆண்டுகள் பழமையான முட்டை - உள்ளே இருந்ததை கண்டு அதிர்ந்த விஞ்ஞானிகள்!
1,700 ஆண்டுகள் பழமையான முட்டைக்குள் இன்றளவும் திரவம் அப்படியே இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தியில் ஆழ்த்தியுள்ளது.
பழமையான முட்டை
இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம்ஷயரில் அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில், சுமார் 1700 ஆண்டுகள் பழமையான முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது உள்ளே இன்றளவும் திரவம் அப்படியே இருப்பது தெரியவந்தது. இந்த திரவம் முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவின் கலவையாக இருக்கலாம் என நம்புகின்றனர்.
மேலும், இந்த முட்டைகளை தொடர்ந்து ஆய்வு செய்வதன் மூலம், பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பறவைகள் இனம் குறித்த ரகசியம் தெரியவரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அடுத்த கட்ட ஆய்வு
இதுகுறித்து தொல்பொருள் விஞ்ஞானியான டானா குட்பர்டன் பிரவுன் பேசுகையில் "பல நூறு ஆண்டுகளில் வெளியேறியிருக்க வேண்டிய இதன் திரவங்கள், எப்படி உள்ளேயே இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த முட்டைகள் உலகிலேயே மிகப் பழமையான முட்டைகளாக இருக்கலாம்" என்றார். கடந்த 2010-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த முட்டையை CT ஸ்கேன் செய்தபோது, உள்ளே திரவம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். AYLESBURY EFF எனப்படும் அந்த திரவத்தை பிரித்தெடுத்து, அடுத்த கட்ட ஆய்வு மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.