'முட்டாள்' - இந்திய ரசிகர்களை விமர்சித்த இங்கிலாந்து வீரர் - இப்போது என்ன சொல்கிறார்..?
இந்திய ரசிகர்களை விமர்சித்ததற்காக வருந்துவதாக இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் கூறியுள்ளார்.
ஹாரி புரூக்
கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அறிமுகமானவர் ஹாரி புரூக். கடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி இவரை ரூ.13.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.
ஆனால் அந்த தொடரில் 11 போட்டிகள் விளையாடி வெறும் 190 ரன்கள் மட்டுமே ஹாரி புரூக் எடுத்திருந்தார். முதல் சில போட்டிகளில் சொதப்பிய நிலையில் இந்திய ரசிகர்கள் அவரை விமர்சித்தனர்.
அப்போது கொல்கத்தா அணிக்கு எதிரான ஒரு போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். பின்னர், இந்திய ரசிகர்களின் வாயை அடைத்ததில் மகிழ்ச்சி என ஒரு நேர்காணலில் பதிலடி கொடுத்தார்.
வருந்துகிறேன்
ஆனால் அதன் பிறகு நடந்த போட்டிகளில் ஹாரி புரூக் சொதப்பினார். தற்போது அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் நெருங்கிய நிலையில், இந்திய ரசிகர்களை விமர்சித்ததற்காக வருந்துவதாக ஹாரி புரூக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது "நான் ஒரு முட்டாள். இந்திய ரசிகர்கள் குறித்து முட்டாள்தனமான விஷயத்தை அந்த நேர்காணலில் கூறியிருக்கக் கூடாது. அதற்காக வருந்துகிறேன். இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரை பார்த்து கொண்டிருந்த போது, சில தேவையில்லாத விமர்சனங்களை பார்க்க நேர்ந்தது.
அந்த சம்பவத்திற்கு பின் சமூக வலைத்தளங்களிலிருந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டேன். இப்போதும் நான் சமூக வலைத்தளங்களில் இருக்கிறேன். ஆனால் அதனை பயன்படுத்துவதற்கு தனியாக அட்மின் இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களின் கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தில் சிக்கல்: சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை IBC Tamil
