காதலி முன் சதம் விளாசிய ஹாரி ப்ரூக் - கொண்டாட்டத்தில் குதித்த நெகிழ்ச்சி சம்பவம்
16வது ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
KKR vs SRH
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஓபனிங் வீரராக களமிறங்கிய ஹாரி ப்ரூக் சிறப்பாக விளையாடினார். பவர் பிளே ஓவர்களில் கொல்கத்தா பவுலர்களை வெளுத்துவாங்கிய ப்ரூக் 55 பந்துகளில் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
நாட் அவுட் பேட்ஸ்மேனாக அவர் எடுத்த சதத்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் இதில் அடக்கம். அவரின் சதம் உதவியுடன் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்தது.
ஹாரி ப்ரூக்
தொடர்ந்து, 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு ஹாரி புரூக், தனது காதலி முன் சதம் அடித்ததாக பேட்டியில் தெரிவித்தார்.
மேலும், எனது காதலி இங்கே இருக்கிறார். ஆனால் எனது குடும்பத்தினர் அனைவரும் ஓய்வுக்காக சென்றுவிட்டனர். அவர்கள் அனைவரும் எனது சதத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் எனத் தெரிவித்தார்.