ஆபாச படமெடுக்கும் சொகுசு படகு; உள்ளே துப்பாக்கி,போதைப் பொருட்கள் - அதிரடி காட்டிய அதிகாரிகள்!
ஆபாச படங்களை எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட சொகுசு படகு ஒன்றை அமெரிக்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சொகுசு படகு
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் நன்டூகெட் என்ற சிறிய தீவு உள்ளது. கடந்த செவ்வாயன்று காலை அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்த தீவில் சோதனையை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த ஒரு சொகுசு படகில் இருந்து பெண் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் "அந்த படகிற்குள் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதாகவும், வார இறுதி பார்ட்டிக்கு பின்னர் ஆபாசப் படங்கள் இங்கு எடுக்கப்படுவதாகவும் அந்த பெண் தகவல் அளித்துள்ளார்.
உடனடியாக அதிகாரிகள் அந்த சொகுசு பாகிற்குள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சொகுசு படகில் இருந்து 3 கிராம் Cocaine, 14 கிராம் Ketamine , துப்பாக்கிகள், துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
உரிமையாளர் கைது
மேலும், ஆபாச காட்சிகளை படமாக்குவதற்காக சொகுசு படுக்கை அறையும் படகுக்குள் வடிவமைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த படகின் உரிமையாளரான ஸ்காட் புர்கே என்பவரையும் அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்தினர்.
அவர் ஒரு ஓய்வு பெற்ற மருத்துவர் ஆவார். அவர் மீது போதைப் பொருள், ஆயுதம் கடத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றத்தில் தன மீதான புகார்களை மறுத்துள்ளார் ஸ்காட் புர்கே.
69 வயதாகும் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், எனவே சிறையில் அடைத்தால் தனது நிலைமை மேலும் விபரீதம் அடையும் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.