அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்; அதிமுகவுடன் கை கோர்க்கும் பாமக? என்ன காரணம்!
அதிமுக கூட்டணியில் பாமக இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாமக முடிவு
2021 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது. அப்போது 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, 5 இடங்களில் வெற்றி பெற்றது. 2024 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியிலேயே நீடித்தது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அதிமுக ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்திருந்தது. அவரது பதவி காலம் முடிவடையவுள்ளது. இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு பாமகவில் டாக்டர் ராமதாஸ்,
ராஜ்யசபா சீட்?
அன்புமணி ராமதாஸ் இருவருமே ஒப்புக் கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஜூலை மாதம் ராஜ்யசபா தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக அதிமுக- பாமக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கின்றனர்.
முன்னதாக தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் என அதிமுக உறுதிமொழி கொடுத்துள்ளது. ஆனால், அதிமுக தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.